பாஜக தான் நம்ம டார்கெட்., பாஜகவின் அரசியலை மக்களுக்கு எடுத்துரையுங்கள் - தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்.! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என்று, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலினின் அந்த கடிதத்தில், "மதவெறியை விதைத்து கலவரத்தைத் தூண்டிவிடும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.

மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை மக்களுக்கு நினைவு படுத்துங்கள். 

உள்ளாட்சியில் நாடே போற்றும் வகையில் வென்று காட்டுவோம்; நல்லாட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் .

தோழமைக் கட்சிகளுக்கு உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்குவதில் சுணக்கம் இல்லாமல் செயல்படவேண்டும். 

திமுக வேட்பாளர்களை ராணுவ வீரர்களை தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகள் உடன் தேர்வு செய்ய வேண்டும்.

சொந்த விருப்பு வெறுப்புகளை சிறிதளவும் தலை எடுக்க அனுமதிக்கக் கூடாது" என்று தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் முகஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk stalin letter to dmk members for local body election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->