விஜய் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது - அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!!
ministers no criticizes actor vijay
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார்.
இந்த நிலையில், 2-வது வாரமாக பிரசாரத்தை தொடங்கியுள்ள விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது விஜய், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்திய அவரது கருத்துக்கு அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் பதிலடி கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு அமைச்சரின் பதிலும் வெவ்வேறாக இருந்ததால் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்தது. இந்த நிலையில், இனி விஜயை விமர்சித்து அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்.
ஏதாவது, விஜய் கருத்துக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்பட்டால், கட்சித் தலைமையில் இருந்தே அது வெளிவரும். அமைச்சர்கள் அனைவரும் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று கூறினால் போதும் என்று தெரிவித்துவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது அமைச்சர்கள் யாரும் விஜய் குறித்து கருத்து தெரிவிப்பது இல்லை.
English Summary
ministers no criticizes actor vijay