பொங்கல் பரிசு குறித்து நியாய விலை கடைகளில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு...!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் முழு கரும்புடன், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, மற்றும் ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை கடந்த 9ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116வது வார்டில் வெங்கட்ராம் தெருவில் அமைந்துள்ள அமுதம் நியாய விலை கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் ரேஷன் கடையில் உள்ள பதிவேடுகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு மொத்தம் உள்ள குடும்ப அட்டைத்தர்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகுப்பு எண்ணிக்கை விவரங்களை ஊழியர்களிடம் கேட்டு அறிந்தார். அதேபோன்று பணியாளர்கள் பதிவேடு, பொருட்கள் பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொது மக்களிடம் பொங்கல் பரிசு தொகப்பு முறையாக வழங்கப்படுகிறதா...? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு அறிந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udhyanidhi inspects ration shop regarding pongal gifts


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->