ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காந்தி!
Minister R Gandhi inaugurated the primary health center building
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், பரவத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டியுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், பரவத்தூர் ஊராட்சியில்கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கினார்கள். உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா ,*
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம்,* திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமைந.செ.சரண்யாதேவி. ஒன்றியக் குழுத் தலைவர் கலைக்குமார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜு. வட்டார மருத்துவ அலுவலர்மரு.கோபி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராமன், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தனம்மாள் மற்றும் பலர் உள்ளனர்.

இதேபோல உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்ட
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலாஜா நகராட்சி, CM மஹாலில்நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு. மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகள்வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வருவாய்கோட்டாட்சியர் இராஜராஜன், வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் இளையராணி மற்றும் பலர் உள்ளனர்
அதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (30.7.2025) இராணிப்பேட்டை நகராட்சி, CSI சர்ச்சில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு. மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா ஆணைகள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத். வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன். நகராட்சி ஆணையாளர் ப்ரீத்தி. வட்டாட்சியர் ஆனந்தன். நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர செயலாளர்
பி.பூங்காவனம்மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC
மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்,
English Summary
Minister R Gandhi inaugurated the primary health center building