"இது மின்வெட்டு இல்லைங்க, யாரோ வயரைக் கழற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள்" அமைச்சர் என். ஆனந்த் கலகல விளக்கம்!
Minister N Anand Clarifies Speech Disruption Blames Opposition for Intentional Wire Disconnection
பொதுநிகழ்ச்சி ஒன்றில் தாம் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இடையூறு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் என். ஆனந்த், இது மின்சாரத் துண்டிப்பினால் (Power cut) ஏற்பட்டது அல்ல என்றும், யாரோ ஒரு நபர் திட்டமிட்டு ஒலிபெருக்கி வயரைக் கழற்றிவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
"செய்தியைப் பெரிதாக்க வேண்டாம்" அமைச்சர் விளக்கம்:
இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என். ஆனந்த், "இங்கு மின்சாரம் எதுவும் துண்டிக்கப்படவில்லை சார், யாரோ ஒருத்தர் வயரைப் பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. உடனே நீங்கள் இந்தச் செய்தியைப் பெரிதாக்கி விடாதீர்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு:
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், "சிறிய குழந்தைகளைப் பயன்படுத்திக் கூட வயர்களைப் பிடுங்கிவிட்டுச் செல்ல வைக்கிறார்கள். அந்த அளவுக்கு எதிர்க்கட்சியினர் மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்" எனக் குற்றம்சாட்டினார்.
English Summary
Minister N Anand Clarifies Speech Disruption Blames Opposition for Intentional Wire Disconnection