விஜய்யின் தராதரம் அவ்வுளவுதான் - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்.!!
minister kn neru speech about tvk leader vijay
அமைச்சர் கே.என். நேரு இன்று திருச்சியில் செய்தியாளர்களை சாந்தி பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:- "பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது. காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் என விமர்சனம் செய்துள்ளாரே என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்.
நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்க என்பதற்காக எது வேணாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது என்று ஆவேசமாக பதிலளித்தார்.
English Summary
minister kn neru speech about tvk leader vijay