கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு.! - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் Wings to Fly திட்டத்தின் மூலம் கல்விச்சுற்றுலாவாக லண்டன் செல்லும் மாணவர்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது Rotary Club of Madras East மற்றும் Foundation for Vocational Training உடன் இணைந்து Wings to Fly திட்டத்தின் மூலம் கடந்த 6 வருடங்களாக, 6 மற்றும் 7, 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் சென்னைப் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் குறித்து பல்வேறு நிலைகளில் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர். 

இதில் 2016ம் வருடம் மலேசியாவிற்கும், 2017ல் ஜெர்மனிக்கும், 2018ல் அமெரிக்காவில் உள்ள NASAவிற்கும் மற்றும் 2019ம் வருடம் சிங்கப்பூருக்கும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2020ம் ஆண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு வெற்றி பெற்ற 8 மாணவ, மாணவியர்களை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மடிக்கணினிகளை வழங்கி கௌரவித்தார். 

இதன் தொடர்ச்சியாக, 2021-2022ஆம் கல்வியாண்டில் Wings to fly திட்டத்தின் மூலம் 70 சென்னைப் பள்ளிகளில் பயிலும் 10,000 மாணவ, மாணவியர்களுக்கு இடையே 4 நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் 32 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் 8 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.  

இவர்களை கல்விச்சுற்றுலாவாக லண்டன் நகருக்கு 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று கல்விச் சுற்றுலாவாக லண்டன் நகருக்கு செல்லும் 8 மாணவ, மாணவியர்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பாராட்டிசான்றிதழ்களை வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KN Nehru wished govt school students


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->