" எங்களை தவிர வேறு யாருக்கும் அருகதை இல்லை " - அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவங்கி 6 மாதங்கள் ஆன சமயத்திலேயே, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றியை அடைந்தது. 

இதுபோன்ற பல வரலாறுகள் எங்களுக்கு உண்டு. கடந்த 2016 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியை அடைந்தோம். அதிமுகவிற்கு தற்போது 49 வயதுகள் ஆகிறது. வருடங்கள் கூடினாலும், அதிமுக இளமையாகவே இருக்கிறது. 

அடுத்த வருடத்தில் அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. பொன்விழா வருடத்திலும் அதிமுகவின் ஆட்சி நடைபெறும். தேர்தலுக்கு அரசியல் கட்சிகளை விட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதிமுகவின் ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். அதிமுகவை தவிர வேறு எக்கட்சியும் தமிழகத்தில் ஆட்சியமைக்க அருகதை இல்லை.

கருணாநிதியின் காலகட்டத்திலேயே 10 தேர்தலை சந்தித்து, 7 தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளோம். மு.க. ஸ்டாலினின் கைகளில் இப்போதுதான் கட்சி வந்துள்ளது. அவர் ஒரு கத்துக்குட்டி. திமுகவை பற்றி நாங்கள் கவலைகொள்ள தேவையில்லை. அதிமுகவை வெற்றியடைய எக்கட்சிக்கும் சக்தி என்பது இல்லை " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kadambur Raju Pressmeet 18 Oct 2020


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal