ஒடிசா ரயில் விபத்து || தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை என்ன.? தமிழக அமைச்சர் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 200 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து இருக்கிறோம். வருவாய் துறை சார்பில் வந்தவர்களுக்கு உணவு,குடிநீர். மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவி உபகரணங்களுடன் தயார் நிலையில் வந்திருந்தனர்.

சென்னை வந்த பயணிகளில் 23 பேருக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை தேவைப்பட்டது. அதில் காயமடைந்த 4 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் மூன்று பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒடிசாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் 70 பேர் அடையாளம் காணப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவர்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

தொடர்பு கொள்ள முடியாத 8 பேரின் முகவரிகளை ரயில்வே துறையின் மூலம் பெற்று அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இன்று பிற்பகல் ஒடிசாவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது நாளை சென்னை வந்தடைய உள்ளது. சிறப்பு ரயில் மூலம் ஒரே ஒரு நபர் வந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வசதிகளை செய்து தருமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள

1)நாரகணிகோபி, ஆண், வயது - 34

2)கார்த்திக், ஆண், வயது -19,

3) ரகுநாத், ஆண். வயது - 21,

(4) மீனா, பெண், வயது - 66,

(5) எ. ஜெகதீசன், ஆண், வயது - 47,

(6) கமல், ஆண், வயது - 26,

(7) கல்பனா, பெண், வயது - 19,

(8) அருண், ஆண், வயது -21 இந்த 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல்களை, மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்களான, கட்டணமில்லா தொலைபேசி – 1070 மற்றும் செல்பேசி – 9445869843 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister explain about 8 people missing in train accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->