வேகமா வர முடியல.. இல்லனா கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன் - அமைச்சர் துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வேலூரில் நடைபெற்ற velloreவாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதாவது:- "தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பார்கள், எதிர்க்கட்சி எப்படி வியூகம் வகுக்கும், நமது கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு எப்படி ஓட்டு போடுவார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். கடந்த தேர்தலில் நான் ஏமாந்ததற்கு காரணம், கொரோனா வந்ததால் நான் படுத்துவிட்டேன்.

என்னால் வேகமாக சென்று வர முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன். ஒரு சிலர் சேர்ந்து துரோகங்களை நடத்தி விட்டார்கள். அதுவும் எனக்கு தெரியும். துரோகிகளை களையெடுத்து விட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு.

எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவனை மன்னிக்க மாட்டேன். இந்த கட்சிக்கு துரோகம் செய்வதை விட உலகத்தில் கொடுமை இருக்க முடியாது. கடந்த முறை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து விட்டேன். அதன் விளைவு தான் பல பாடங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதனை கட்சி நிர்வாகிகள் பொது மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister durai murugan speech in vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->