டாஸ்மாக்கில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது - அமைச்சர் செந்தில் பாலாஜி.!
Mininister senthil Balaji release rules and regulations to tasmac
அனைத்து டாஸ்மாக் கடைகளும் மதியம் 12 முதல் இரவு 10 வரை மட்டுமே இயங்க வேண்டும் என அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. அந்த வகையில் கூடுதலாக வசூலிக்க அமைச்சர் வற்புறுத்தியதாகவும் டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது.
மதுபான கடைகளைத் தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Mininister senthil Balaji release rules and regulations to tasmac