எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் மகனின் திருமணம் முடித்த கையோடு செய்த செயல்! வியப்பில் பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் அவரது மகனுக்கு திருமணம் முடிந்த உடன் புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். 

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பானி. இவர் அதிமுக வட்டச் செயலாளராக உள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சப்பானி அ.தி.மு.கவில் இருந்து வருவதால் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும் தீவிர பக்தருமாக திகழ்கிறார். 

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு சப்பானின் நாள்தோறும் சொந்த செலவில் மாலை அணிவித்து மரியாதை செய்வார். 

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவரின் மகன் சுரேஷ் கோபாலுக்கு பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கோவிலில் நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் நடைபெற்ற கையோடு சப்பானி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு புதுமண தம்பதியருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து ஆசீர் பெற்றனர்.

பின்னர் எம்ஜிஆர் சிலையுடன் சப்பானியின் குடும்பத்தினரும் புதுமண தம்பதியினரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுமண தம்பதியுடன் எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு செய்த செயல் அனைவரையும் வியப்படைய வைத்ததுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MGR fan son marriage with paid respects MGR statue


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->