மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் உடல்நல சார்ந்தபிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களை துவக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மன ரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகளில் மருத்துவ முகாம், தன்னம்பிக்கை குறும்படம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mental health and health awareness for students Chief Minister M.K. Stalin started


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->