தமிழக எழுத்தாளர் திரு.சி.ஆர்.கண்ணன் அவர்கள் நினைவு தினம்!.
Memorial Day of Tamil Nadu writer Mr C R Kannan
சி. ஆர். கண்ணன் (இறப்பு: ஜூலை 9, 2009, அகவை 79) முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். அபர்ணா நாயுடு என்ற புனைப்பெயரில் பல தொடர்கதைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணிக் கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.
பத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் "அபர்ணா நாயுடு". இப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணி கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.
"சகுந்த்" என்கிற புனைபெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ந்து எழுதிய ஒரு பக்கக் கதைகள் எழுதினர். அவரது கதையான "பகடை பன்னிரண்டு" திரைப்படமாக கமலகாசன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் நடிப்பில் வெளி வந்தது.
இஅவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்" என்ற தொகுப்பாக வெளிவந்தன. சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் 2009 ஜூலை 9 ஆம் தேதி அன்று மறைந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளர் திரு.ஜீவநாயகம் சிரில் டேனியல் அவர்கள் பிறந்ததினம்!.
ஜீவநாயகம் சிரில் டேனியல் (Jeevanayagam Cyril Daniel ஜூலை 9, 1927 - ஆகஸ்ட் 23, 2011) ஒரு இந்திய இயற்கையியலாளர். ஜே.சி. என்றும் அறியப்படுகிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சலீம் அலியின் பணிகளால் உத்வேகம் பெற்றார்.
நீர், நில வாழ்வினங்கள், குறிப்பாக இவற்றில் அழியக்கூடிய ஆபத்தில் உள்ள ஆசிய யானைகள், காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் குறித்தெல்லாம் ஆராய்ந்தார். பறவைகள் வலசை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார்.
English Summary
Memorial Day of Tamil Nadu writer Mr C R Kannan