MLA சரவணக்குமாருடன் திமுக சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்பு..முக்கிய ஆலோசனை!
Meeting with DMK affiliated party administrators along with MLA Saravanakumar Important discussions
தேனி மாவட்டம் பெரியகுளத்தில்சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பு - அணி நிர்வாகிகள் திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமாரை அவருடைய அலுவலகத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட சார்பு - அணி நிர்வாகிகள் பெரியகுளம் நகரச் செயலாளர் கே.முகமது இலியாஸ் முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.முகமது இலியாஸ் அவர்கள் வருகை தந்த அணைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார் நகர துணைச்செயலாளர் ஏ.பி.சரவணன்.மு.சேதுராமன் - பொருளாளர் சுந்தரபாண்டி - மாவட்டவிளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ப. கார்த்திக். மாவட்ட பிரதிநிகள் செந்தில்குமார், ராஜபாண்டி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்இறுதியாக பெரியகுளம் நகர துணைச செயலாளர் மு.சேதுராமன் நன்றி கூறினார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் குணமுத்து குடும்பத்துடன் ஆசிர்வாதம்..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் இவர் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை அமைப்பாளராக உள்ளார் .
ஓ. பன்னீர்செல்வம் அவர்களது தீவிர விசுவாசியாக செயல்படும் குனமுத்து தன்னுடைய மகளது ஒவ்வொரு பிறந்த நாளன்று ஆசிர்வாதம் வாங்கி வருவது வழக்கம் அதேபோல் இந்தாண்டும் தனது மகளின் ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது இல்லத்திற்கு சென்று அவரது இல்லத்திலேயே இனிப்பு கேக் வெட்டி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது . குனமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரடியாக சென்று ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடத்தில் வாழ்த்துக்களை பெற்றார்
English Summary
Meeting with DMK affiliated party administrators along with MLA Saravanakumar Important discussions