வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை..பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய MLA!  - Seithipunal
Seithipunal


வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்குவதை  எதிக்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார். 

உலக புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு ஆண்டு தோறும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி வழியாக கடந்து செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 13ஆம் ஆண்டாக காந்தி வீதி அமுதசுரபி அருகில் உருளையன்பேட்டை தொகுதி கண்டாக்டர் தோட்டம் கிளைக் கழக செயலாளர் திரு. இரா. பிரகாஷ் (எ) சண்முகசுந்தரம், ஆனந்தன், மகேஷ், முருகன் ஆகியோர் மதிய அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தனர். 

இதில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிக்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்களும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கோபால் அவர்களும் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து காந்தி வீதி, தூய இருதய ஆண்டவர் கோவில் அருகில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. ரெமி எட்வின் அவர்களின் ஏற்பாட்டில் 4ஆம் ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சன். சண்முகம், தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அஜிபாஷா, கிளைக் கழக செயலாளர் அகிலன், நெல்லித்தோப்பு ராம், தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆனந்த், ரமேஷ், முருகானந்தம், வினோத், விக்னேஷ், ஜெயக்குமார், சூர்யா, நாராயணன், ஆனந்த், ராஜவேல், பாக்யராஜ், சைபுதீன், மெக்கானிக் மணி, பிரவீன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ரியாஸ் மற்றும் அழகர், மதிவாணன், கதிர்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pilgrimage to the Velankanni Temple MLA provided six-flavored meals to the devotees


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->