கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த 02 பெண்களின் குடும்பத்தினருக்கு ரூ.04 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
Chief Minister Stalin has announced relief to the families of 02 women died in an accident when a wall collapsed at the Cuddalore Chipcot factory
கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் மதில்சுவர் ஒன்று சாய்ந்த விழுந்ததில் அங்கு பணி புரிந்த 02 பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த ரசாயன தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து இளமதி (35 ), இந்திரா(32) பலியாகியுள்ளனர். இந்த சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.
திறப்பு விழா கண்ட இரண்டு மாதங்களுக்குள் சுவர் இடிந்துள்ளது. இங்கு வட மாநிலத்தவர்கள் கட்டிட பணி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம். குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (23.8.2025) மாலை 6.00 மணியளவில் மதில்சுவர் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் பணிபுரிந்துவந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த திருமதி. இளமதி (வயது 35) க/பெ.அன்பு மற்றும் திருமதி. இந்திரா (வயது 32) க/பெ. தேவர் ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Stalin has announced relief to the families of 02 women died in an accident when a wall collapsed at the Cuddalore Chipcot factory