பரமக்குடி அருகே சோகம்: மின்னல் தாக்கி சகோதரிகள் இருவர் உயிரிழப்பு..!
Two sisters killed in lightning strike near Paramakudi
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்து சகோதரிகளான பள்ளிச் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீனின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், செய்யது அஸ்பியா பானு சபிக்கா பானு (9), அரியகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 05-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் சகோதரிகள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள பிற்பகல் 03 மணியளவில் வேப்பரத்தின் அடியில் வேப்பங்கொட்டை சேகரித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த சகோதரிகள் இருவர் மீதும் மின்னல் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சத்திரக்குடி போலீஸார் விரைந்து வந்து, 02 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மின்னல் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், வாழவந்தாள்புரம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Two sisters killed in lightning strike near Paramakudi