கேரளாவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் அடுத்த அணி..? - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடவுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனை அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அர்ஜெண்டினா அணியுடன், விளையாடவுள்ள மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது எந்த அணி என இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அது குறித்து இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கூறியுள்ளதாவது:

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி இந்தியாவில் விளையாடுவது குறித்த மின்னஞ்சலை நாங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றதாகவும், இது குறித்து முதலில் அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவித்தால் நன்றாக இருக்கும் என கருதி நாங்கள் அமைதி காததாகவும், அதன்படி அந்த அணி நிர்வாகம் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாட ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பிரேசில் உள்ளிட்ட அணிகள் உடன் பேசி வருவதாகவும்,அடுத்த ஒரு வார காலத்தில் இறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயணத்தில் அர்ஜெண்டினா அணி ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும், இதற்காக சுமார் 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மலப்புரம் அல்லது கோழிக்கோட்டில் குறித்த சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தேசிய கால்பந்து அணிகள் இதில் விளையாடுவதால், இந்த போட்டியை நடத்த சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், ஆனாலும்,நிதி விவகாரம் எங்களுக்கு பெரிய சிக்கலாக இருக்காது என்றும், அதிக அளவில் போட்டிக்கான ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அர்ஜெண்டினா அணி உடன் நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவில் அந்த அணி விளையாட வேண்டுமென குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு வருவதாக முதலில் தெரிவித்து இருந்தது. 

இதன் காரணமாகத்தான் குறித்த போட்டி குறித்தும், ஆட்டம் சார்ந்து சர்ச்சை எழுந்தமைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது, அனைத்துக்கும் தீர்வாக வரும் நவம்பரில் அர்ஜெண்டினா அணி இந்தியாவில் விளையாடவுள்ளதாக ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆண்டோ அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி நவம்பரில் கேரள மாநிலத்தில் விளையாடவுள்ளமை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will be the next team to play against Argentina in the football tournament in Kerala


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->