டெல்லியில் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீரா மிதுன்: அவருக்கு என்னதான் ஆச்சு..!
Meera Mithun is undergoing treatment at a mental hospital in Delhi
மாடல் மற்றும் நடிகையான மீரா மிதுன் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். இவர் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், கடந்த 04 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரை போலீசார் மீரா மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவரை சென்னை அழைத்து வர முடியவில்லை என்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் (இன்று) ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவர், டெல்லியில் மனநல மருத்துவமனை காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Meera Mithun is undergoing treatment at a mental hospital in Delhi