8-ம் தேதி மூடப்படவுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில்.. இது தான் காரணம்.!  - Seithipunal
Seithipunal


இந்த மாதத்தில் வரவிருக்கிற சந்திர கிரகணத்தினை முன்னிட்டு பெருமைமிக்க ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "வருகிற 8-ம் தேதி பிற்பகல் நேரத்தில் 2.39 மணி அளவில் தொடங்கி மாலை 6.19 மணி வரை நிகழ இருக்கின்ற சந்திரகிரகணத்தினையொட்டி , அன்றைய தினம் கோவிலில் காலை 9.30 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையிலும் சுந்தரேசுவரர் சுவாமி பலகனி மற்றும் மீனாட்சி அம்மன் கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். 

தொடர்ந்து, அன்றைய தினத்தில் நிகழவிருக்கும் அன்னாபிஷேகம் காலை 7 மணி அளவில் நடைபெறும். இதனுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் தருணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த கோவில் மட்டுமின்றி மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த மற்ற 22 உபகோவில்களும் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்." என தெரிவித்துள்ளது. மேலும், மற்றொரு அறிக்கையில் வருகிற 7-ந் தேதி அன்று கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meenakshiyamman Temple Closed On Nov 08 2022


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->