தினமும் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க! - Seithipunal
Seithipunal


தற்போதைய வாழ்க்கை முறையால் பலருக்கு முதுகெலும்பு பலவீனமடைந்து, இரவு நேரங்களில் தூங்கும்போது வலியால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தவறான உணவு பழக்கவழக்கங்கள் முதுகுவலியை மேலும் தீவிரப்படுத்தும்.

அதிக புரதம்
மிக அதிகமாக புரதம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உடலின் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேறி, எலும்புகள் பலவீனமடைகின்றன. ஆகவே, புரதத்தை மிதமான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்
கூல்டிரிங்க்ஸ் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களில் அதிக பாஸ்பேட் உள்ளதால் உடலில் கால்சியம் குறையும். இதன் விளைவாக எலும்புகள் பலவீனமடைந்து முதுகுவலிக்கு வழிவகுக்கிறது.

 வாயு மருந்துகள்
வாயு தொடர்பான மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, உடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கிய தாதுக்களை உறிஞ்சுவதில் தடையாக இருக்கும். இதனால் எலும்புகள் மெதுவாக பலவீனமடையும்.

காஃபின் பானங்கள்
டீ, காபி போன்ற காஃபின் உள்ள பானங்களை அதிகமாக குடித்தால் எலும்புகளின் வலிமை குறையும். முதுகுவலி உள்ளவர்களுக்கு கால்சியம் தேவைகள் அதிகம் இருப்பதால், காஃபின் பானங்களை குறைப்பது நல்லது.

 வைட்டமின் டி மற்றும் கால்சியம்
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் டி மற்றும் கால்சியம் மிக அவசியம். இவை குறைந்தால் எலும்புகள் பலவீனமடையும். ஆகவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகள் மற்றும் கால்சியம் சத்து உள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஹார்மோன் சமநிலை
எலும்புகள் வலுவாக இருக்க ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் பங்கு முக்கியம். வயது கூடும் போது, தேவையான ஊட்டச்சத்துகளை சரியாகப் பெறுவது அவசியம்.

முதுகுவலியால் அவதிப்படுவோர், இவ்வுணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தி, மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you suffer from back pain every day Stop eating these foods immediately


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->