மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


மீனாட்சிசுந்தரம் பிள்ளை :

மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத்தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.

இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.

19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meenakshi Sundaram Pillai birthday 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->