மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை:  வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவே திவ்யா தற்கொலை செய்தார்' என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  மகன், 3 மகள்கள் உள்ளனர். இதில்  3-வது மகள் திவ்யா  வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவம் படிப்பை முடித்த அவர் .முதுகலை மருத்துவ படிப்புக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பொது மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திவ்யா டி.பி.சத்திரம் பகுதியில் வாடகைக்கு தனியாக அறை எடுத்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று வந்தார்.

அப்போது உடன்பயிலும் தட்சணாமூர்த்தி என்பவருடன்  திவ்யாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர, இரு குடும்பத்தாரும் கலந்துபேசி, படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் முதுகலை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்முறை வகுப்புக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 2 மணிக்கு தனது அறைக்கு சென்று இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று காலை காதலன் தட்சணாமூர்த்தி திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது திவ்யா அழைப்பை எடுக்காததால் உடனடியாக அவரது நண்பருடன் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திவ்யா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

தகவலின்பேரில் அங்கு விரைந்த  டி.பி.சத்திரம் போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அந்த அறையை முழுவதுமாக ஆய்வு செய்தனர். கடிதம் எதுவும் சிக்கவில்லை. எனவே, செல்போன் தரவுகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், 'அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவே திவ்யா தற்கொலை செய்தார்' என்று குற்றம் சாட்டினர்.

 'இதுபோன்று எந்த சம்பவங்களும் எங்கள் மருத்துவமனையில் நடைபெறாது. மாணவர்களில் நலனை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்' என் இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical college student commits suicide by hanging Shocking news revealed


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->