தூத்துக்குடி மாநகராட்சியில் இறைச்சி கடைகளுக்கு தடை...!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜன.16) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு தடை விதிப்பதாக தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக அரசு உத்தரவின் படி 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதி காலை 12 மணி முதல் இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்தவித உயிரினங்களையும் இறைச்சிக்காகவோ அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ வதை செய்யவோ அல்லது மாமிசத்தை விற்பனை செய்யவோ கூடாது.

மீறி விற்பனை செய்தாலோ அல்லது வதை செய்தாலோ அந்த மாமிசங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு விற்பனை மற்றும் வதை செய்பவர்கள் மீது தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்படி தொழில் மற்றும் விற்பனை செய்வோர் மாநகராட்சிக்கு தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meat shops ban in Thoothukudi Corporation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->