எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு இன்று அறிவிப்பு.!
MBBS and BDS Councelling rank list today announced
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேர் என மொத்தம் 36, 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% உள்ள இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிடுகிறார். மேலும் கலந்தாய்வு தேதிகளும் இன்று அறிவிக்கப்படுகிறது
English Summary
MBBS and BDS Councelling rank list today announced