#Breaking: மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவகுமார் வெற்றி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான இன்று 75 வாக்கு மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்த தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தி.மு.க. - பா.ம.க. - 18 இடங்களிலும், காங். - பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - வி.சி.க - 1 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

மாலை 3 மணி நிலவரப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி தொகுதியில் வெங்கடேஸ்வரன் 36112 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், சேலம் தொகுதியில் அருள் 29398 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், காஞ்சிபுரம் தொகுதியில் மகேஷ் குமார் 12844 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மயிலம் தொகுதியில் சிவகுமார் 11321 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், நெய்வேலி தொகுதியில் ஜெகன் 21600 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், பென்னாகரம் தொகுதியில் ஜி.கே மணி 22993 வாக்குகள் பெற்று முன்னிலையிலும் இருந்தனர். 

இந்நிலையில், மயிலம் தொகுதியில் களமிறங்கிய பாமக வேட்பாளர் சிவகுமார் வெற்றி அடைந்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக கட்சி வேட்பாளர் சிவகுமார் வெற்றி அடைந்துள்ளார். சிவகுமாரை எதிர்த்து திமுக சார்பில் மாசிலாமணி களமிறப்பட்ட நிலையில், அவர் தோல்வியை தழுவினார்.
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayilam PMK Candidate Victory TN Election 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->