ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்.. மனைவி, தாய்க்கு கோவில்..! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கஸ்தூரிபாய் தெரு பகுதியை சேர்ந்தவர் மதன்மோகன். இவர் மயிலாடுதுறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி மீனாட்சி அம்மாள். மீனாட்சி அம்மாள் - மதன் மோகன் தம்பதி இருவரும் கடந்த 40 வருடமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2019 ஆம் வருடம் உடல்நலக் குறைவால் மீனாட்சி அம்மாள் இயற்கையை எய்தியுள்ளார். ஆரம்ப காலத்தில் மதன்மோகன் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், ஓய்வுக்கு பின்னர் மனைவி மீனாட்சியம்மாள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, இன்று மயிலாடுதுறையில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 

மேலும், தனது துன்பங்களிலும், இன்பங்களிலும் 40 ஆண்டுகள் தோளோடு தோள் சாய்ந்து இருந்த மனைவியின் மறைவை தாங்க முடியாமல் மோகன் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, மனைவியைப் போற்றும் வகையில், தனது மனைவி மற்றும் தாயின் உருவத்தை தத்ரூபமாக சிலை போல வடிவமைத்து, கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். 

பொங்கல் திருநாளில் மக்கள் நலவாழ்வு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்கிய நிலையில், தனது மனைவி மற்றும் தாயாருக்கு பொங்கல் வைத்து தன் கையாலேயே அபிஷேகம் செய்து வழிபட்டு, இயக்கத்தை தொடங்கியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி செய்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Ex Police Officer Madhan Mohan Make Temple for wife and Mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal