4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.!
Maths teacher sexual Harrasment to 4 years old girl in thuruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியர் தங்களது 4 வயது மகளை அருகே உள்ள ஸ்ரீசாந்தா மெட்ரிக் பள்ளியில் யூகேஜி சேர்த்துள்ளனர். பள்ளி சென்று வந்த சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிறுமியை யாரோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் பள்ளி தலைமை ஆசிரியரின் கணவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து வன்கொடுமை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். கைதுக்கு பயந்து பள்ளி தலைமை ஆசிரியரின் கணவரும், ஆசிரியருமான காமராஜ் தலைமறைவான நிலையில் அவரை போலீஸார் தேடி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Maths teacher sexual Harrasment to 4 years old girl in thuruvannamalai