ஆசை காதலனுடன் ரகசிய திருமணம்! ஒருமணி நேரத்தில் பைக் திருட்டு வழக்கில் காதலன் கைது! - Seithipunal
Seithipunal


திருமணமான ஒரே மணி நேரத்தில் மனைவி கண்முன்னே கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த். மலைப்பேட்டையில் தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிகளுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வசந்த் தனது காதலியை வடமதுரையில் உள்ள கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

போலீசார் பெண் வீட்டாரருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வர வழித்தனர். இதற்குள் மனைவியுடன் வசந்த் தனது வீட்டிற்கு சென்றார் அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கைது செய்தனர். 

இதுகுறித்து மாணவியிடம் காரில் வந்த கும்பல் விசாரித்த போது தங்களுக்கு இப்போது தான் திருமணம் நடந்து முடிந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து வசந்த்தை காவல் நிலையம் அழைத்துச்சென்ற அவர்கள் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் என தெரிவித்தனர்.

விருதுநகரில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் குற்றவாளியை தேடி வந்ததாகவும் வடமதுரையில் இருப்பது தெரிய வரவே இங்கு வந்து வசந்த்தை கைது செய்துள்ளோம் என கூறினார்கள். இதனை கேட்டு கல்லூரி மாணவி  கதறி அழுதார். பின்னர் போலீசார் அவருக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் ஊருக்கு செல்லுமாறு கூறிய அறிவுரை வழங்கி வீட்டு வழி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married to a lover Boyfriend arrested in bike theft case in one hour


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->