நாளை மறுதினம் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற அக்னி குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல், இந்த ஆண்டும் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பினால் எந்த ஒரு திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் தோற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில் மீண்டும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வரும் மார்ச் 22 ம் தேதி பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

March 22 local holiday for Erode district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->