மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
Manipur Reservation Bill passed in the Lok Sabha
மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவை மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்தார்.
பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் பிரச்சினையை முன்வைத்து கோஷமிட்டனர்.ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் நின்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், இது குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு போராடினர்.
இந்த அமளிக்கு மத்தியில் மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்து பேசும்போது கூறியதாவது, ‘மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருப்பதால் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’ .
இந்த சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் ஜி.எஸ்.டி கவுன்சிலால அங்கீகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி திருத்தங்களைச் செயல்படுத்துவதில் மாநிலத்திற்கு சிரமம் ஏற்படும் என கூறினார்,
அதன்பின் மணிப்பூர் மாநில ஒதுக்கீட்டு மசோதா 2025-ஐ நிதி மந்திரி தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவாறே இருந்தனர். பின்னர் குரல் ஓட்டு மூலம் 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
English Summary
Manipur Reservation Bill passed in the Lok Sabha