திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த அடகு நிறுவன மேலாளர் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற உத்தரவின் பேரில் அடகு நிறுவனத்தில் சோதனை..!!

தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே மேல் ஆழ்வார்கனி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சாலையில் நடந்து செல்லும் பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து செந்தூர்கனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வழிப்பறி செய்யப்பட்ட தங்கச் சங்கிலி தனியார் அடகு நிறுவனத்தில் செந்தூர்கனியின் மாமியார் பெயரில் அடகு வைத்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தங்கச் சங்கிலி ஒப்படைக்குமாறு போலீசார் தனியார் அடகு நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பினார். இதனை அடுத்து கடந்த டிச.24ம் தேதி நேரில் ஆஜரான தனியார் அடகு நிறுவன மண்டல அலுவலர் நகையை ஒப்படைப்பதாக தெரிவித்திருந்தார். 

ஆனால் தற்போது வரை நகை ஒப்படைக்கப்படாததால் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை நிறுவனத்தின் மேலாளர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தனியார் அடகு நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக கிளை மேலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manager arrested for refusing to hand over stolen jewellery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->