சிறுமியை முட்புதருக்குள் தூக்கிச் சென்ற வடமாநில இளைஞர்... அரங்கேறிய அபத்தமான காரியம்..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டில் உள்ள முள்ளிப்பாக்கம் கூட்டு சாலையில் அடுக்குமாடி குடியிருப்பிற்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்காக வடமாநில இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அந்த குடியிருப்பு பணிகள் நடக்கும் வழியே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இதனை அந்த வடமாநில இளைஞர்கள் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர். அந்தவகையில் நேற்று மாணவி அந்த வழியாக நடந்து சென்றபோது மாணவியை வலுக்கட்டாயமாக முட்புதருக்குள் வாய்பொத்தி இழுத்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் திரண்டு அந்த சிறுமியை அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த இளைஞர்களை கட்டுமான பகுதியில் தேடி வந்த பொதுமக்கள், அங்கிருந்த சில இளைஞர்கள் ஓடி ஒளிந்து உள்ளனர். பின்னர் பொதுமக்கள் அவர்களை பிடித்து அடித்து துவம்சம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததன் பேரில் 13 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இருவர் தலைமறைவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kidnapped school girl


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal