அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி - திருப்பூரில் பரபரப்பு.!!
man collpse govt bus mirror in thirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் மதுபோதையில் ஏறியுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து பேருந்து நடத்துனர் ஜெயக்குமாரை எஸ்.ஆர்.சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், கீழே இருந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி மீது வீசி உடைத்துள்ளார்.

இந்தக் கல் பேருந்தின் முன் பக்கமாக அமர்ந்திருந்த இளம்பெண் தலை மீது விழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கண்ணாடி துகள்கள் பட்டு அந்தம் பெண் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த சக பயணிகள் ஜெயக்குமாரை, தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
man collpse govt bus mirror in thirupur