காப்பகத்தில் குழந்தை மீது பெல்டால் தாக்குதல் - கோவையில் பரபரப்பு..!!
man attack children with belt in coimbatore Childrens Nursery
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டை பாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருந்தபோது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.
வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பித்து கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்த அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்ததாவது:- "சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
man attack children with belt in coimbatore Childrens Nursery