மதுபோதையில் மகளிடம் தவறாக நடந்துகொண்ட தந்தை - போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் மகளிடம் தவறாக நடந்துகொண்ட தந்தை - போக்சோவில் கைது.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், அதே பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் பதினான்கு வயதில் ஒரு மகள் உள்ளனர். 

இந்தத் தொழிலாளியின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஏற்கெனவே குடிப்பழக்கம் உள்ள இந்தத் தொழிலாளி, மனைவி இறந்த பின்னர் அதிகளவில் குடிக்கு அடிமையாகியுள்ளார். மேலும், தனது மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கி உள்ளார்.

இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இருப்பினும் அந்தத் தொழிலாளி மகளுக்கு பாலியல் தொல்லை தருவதை நிறுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதும் அவர் வீட்டை விட்டு மாயமானார். 

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தனர். பின்னர் அந்தப் பெண் சம்பவம் தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது தந்தை மீது பாலியல் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமியின் தந்தையைத் தேடி பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for sexuall harassment to daughter in trichy


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->