நெருங்கும் மக்களவை தேர்தல்... மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகை! - Seithipunal
Seithipunal


2024 மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரனாக ஈடுபட்டுள்ளனர். 

தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். 

இதற்கிடையே திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக வருகின்ற 28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த மாதம் 13ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். மக்களவைத் தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே பேச உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mallikarjun kharge next month Tamilnadu visit


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->