இறந்தும் வாழப்போகும் மதுரை பெண்! அடுத்தடுத்த சோகத்திலும் நெகிழ வைத்த இரு சம்பவங்கள்!  - Seithipunal
Seithipunal



மதுரை அருகே மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு, பலரின் உயிரை வாழவைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமயநல்லூர் பகுதியை கார்த்திகா. சில ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள், ஒரு மகளுடன் கார்த்திகா வசித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தேனூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தபோது, கார்த்திகா விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு கார்த்திகா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், கார்த்திகாவின் உறவினர்கள் ஒப்புதலின் பேரில் அவரின் கல்லீரல், கண், சிறுநீரகம், நுரையீரல், இருதயம் ஆகிய உறுப்புகள் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன.

இதேபோல், சேலத்தை சேர்ந்த பள்ளி மாணவன் சம்ரீஷ் விபத்தில் உயிரிழந்த நிலையில், உடனடியாக மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்து உள்ளனர்.

ஆத்தூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த 9ம் வகுப்பு மாணவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாணவனின் பெற்றோர்கள் சுரேஷ் - சித்ரா மருத்துவர்களின் ஆலோசனை படி, மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai woman nad Salem School student organs Donate


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->