மதுரை டைடல் பார்க்: முதலமைச்சரின் அறிவிப்பு விளம்பர அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:- "தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அதிரடியாக உள்ளது. 

மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார், 

மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள இரண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்வது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai taital park ex minister press meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->