மதுரை த.வெ.க.மாநாடு...குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை! - Seithipunal
Seithipunal


மதுரை த.வெ.க.மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்றும்  விஜய் மட்டுமே பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வருகிறது.மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. 

இந்தநிலையில் மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தலா 3,600 பேர் வாகனங்களில் வர இருக்கிறார்கள்.
மொத்தம் 1.5 லட்சம் நாற்காலிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் எதுவும் வழங்கவில்லை. மாநாட்டில் இருந்து உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

தனியார் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டு பணியில் ஈடுபடுத்தப்படும்.12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது.இவ்வாறு த.வெ.க தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai T W K Manadu No entry for children and pregnant women


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->