அதிர்ச்சியில் மதுரை...! நீதிமன்ற வளாகத்தில் போலீஸ்காரர் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் – பொட்டியம்மாள் தம்பதியரின் இளைய மகன் மகாலிங்கம் (30). 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இணைந்த இவர், தற்போது மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக மதுரை ஐகோர்ட்டின் இரவுக் காவல் பொறுப்பில் இருந்தார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு, ஐகோர்ட்டின் பிரதான நுழைவுவாயில் அருகே எஸ்.எல்.ஆர் துப்பாக்கியுடன் காவல் கண்காணிப்பில் இருந்த மகாலிங்கம், அதிகாலை 3 மணியளவில் இயல்பில்லாத முறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்ததாக சகபணியாளர் தெரிவித்தனர்.

இரவு குளிர் காரணமாக உடலை சூடேற்றிக்கொள்ள அவர் அப்படிச் சுற்றி வருவதாகவேவர்கள் நினைத்தனர்.ஆனால் சில நொடிகளில் நடந்தது யாரும் எதிர்பாராத சோகக்காட்சி.திடீரென மகாலிங்கம் துப்பாக்கியை தனது நெஞ்சில் வைத்து சுட்டுக் கொண்டார்.

வெடித்த சத்தத்தில் பிற காவலர்கள் அதிர்ச்சியடைந்து பாய்ந்து சென்றபோது, அவர் ரத்தக் குளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

காவல் துறை துணை கமிஷனர் அனிதா உள்ளிட்ட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடக்க விசாரணையில் அவர் திருமணம் ஆகாதது குறித்து மனஉளைச்சலில் இருந்ததாக தகவல்கள் திரண்டுள்ளன.

மேலும், “என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை” என எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதமும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.ராஜாஜி மருத்துவமனை முன்பு மகாலிங்கத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடி அவரது உடலை பார்த்து கதறியழுத காட்சி அனைவரையும் ரணமிட்டது. மரணத்தின் காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai shock Policeman commits suicide court premises


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->