மேயர் பதவி கொடுக்காத கோபம்; மோடியை புறக்கணித்த ஸ்ரீலேகா: பொதுவெளியில் நடந்துகொண்ட விதத்தால் கட்சியினர் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.ஸ்ரீலேகா ஓய்வுக்குப் பின் பாஜகவில் இணைந்தார். அவர், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவருக்குத்தான், மேயர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் ஆதரவுடன் மேயர் பதவி வி.வி.ராஜேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனால் ஸ்ரீலேகா கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகக் கட்சித் தலைமை கூறிய நிலையில், அத்தனையும் நிராகரித்துள்ளார். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் புதரிக்கண்டம் மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

ஆனால், இந்த நிகழ்ச்சியின் மேடையில் இருந்த ஸ்ரீலேகா, பிரதமரை வரவேற்கவோ, அவரிடம் பேசவோ முயற்சிக்காமல் ஒதுங்கியே நின்றார். மற்ற தலைவர்கள் பிரதமரை வழியனுப்பச் சென்ற போதும் கூட, ஸ்ரீலேகா பாதியிலேயே மேடையை விட்டு இறங்கிச் சென்றது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் அவர் நடந்து கொண்ட விதம் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilekha boycotted Modi due to her disappointment over not being given the mayors post


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->