காங்கிரஸ் மேலிடத்திடம் மனக்கசப்பு; பாஜகவில் இணையும் சசி தரூருக்கு மத்திய அமைச்சர் பதவி..? கேரளா அரசியலில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாஜகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல் வெளியாகி, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியின் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமானவர் சசி தரூர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுபடும் இவர், கடந்த சில ஆண்டுகளாகவே கட்சித் தலைமை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னைத் தொடர்ந்து ஓரங்கட்டி வருவதாக அவர் தனது கவலையை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளமை பேசும் பொருளாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மற்றும் மாநிலத் தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என்பதால் அவர் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளதாவது; 'டெல்லியில் நடந்த கூட்டத்தில், தேவையான மற்றும் முக்கியமான கலந்து கொண்டனர்' என்று பதிலளித்துள்ளார். இந்த நேரத்தில், திருவனந்தபுரத்தில் நேற்று பிரதமர் மோடியை சசி தரூர் வரவேற்றது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. 

சசி தரூர் பாஜகவில் இணைந்தால் அவருக்கு மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சசி தரூர் கட்சி மாறினால் 05 முதல் 06 நகர்ப்புற தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியடைய நேரிடும் என்றும், பாஜகவின் வாக்கு வங்கி 30 சதவீதம் வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Due to a conflict with the Congress high command Shashi Tharoor is joining the BJP and will receive a central ministerial post


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->