பன்னாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உயர்ரக மதுபானம்: ஏர் இந்தியா புதிய திட்டம் அறிமுகம்..!
Air India introduces a new scheme to offer premium alcoholic beverages to passengers traveling on international flights
தங்களது பன்னாட்டு விமானங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் உயர் ரக வெளிநாட்டு மதுபானங்கள் வழங்கும் திட்டத்தை ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் உயர்ரக மதுபானங்களுக்கு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல், அவர்களின் டிக்கெட் கட்டணத்திலேயே, பேக்கேஜின் ஒரு பகுதியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானப் பயணிகளின் கேபின்களான முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரிமியம் எக்னாமி, எக்னாமி வகுப்பு போன்றவைக்கு தகுந்தாற்போல் வெளிநாட்டு மதுபானங்களின் ரகங்கள் மாறுபடுகின்றன.இருப்பினும், அனைத்து வகுப்புகளில் செல்லும் அனைத்து பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப மதுபானங்கள் வழங்கப்படுகின்றன என்று ஏர்இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

இதில் மிக உயர்ரக மதுவான ஸ்காட்லாந்து 21, சிங்கிள் மால்ட் உள்பட இத்தாலியின் உயர்ரக மதுபானங்கள் மற்றும் சிவப்பு ஒயின், பீர் ரகங்கள் போன்றவை வழங்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அனைத்தும் பன்னாடுகளுக்கு இயக்கப்படும் ஏர்இந்தியாவின் சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மட்டுமே இந்த மது விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்நாட்டில் இயக்கப்படும் ஏர்இந்தியா பயணிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அகமதாபாத்தில் விமான விபத்துக்குப் பின், ஏர்இந்தியாவின் பன்னாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக, இதுபோன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, தங்களின் பன்னாட்டு விமானங்களில் பயணிகளை ஈர்ப்பதற்காக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Air India introduces a new scheme to offer premium alcoholic beverages to passengers traveling on international flights