'இன்ஸ்டா' பிரபலம் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்பு; காதலரின் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து; நடந்தது என்ன..?
Insta celebrity Lula Lahfah found dead in an apartment
இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் செயலிகளில் 33 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபல இன்ப்ளுயன்சர் வலம் வந்தவர் லூலா லஹ்பா (26). இந்தோனேசியாவை சேர்ந்த இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல யூடியூபர் மற்றும் இசைக்கலைஞரான ரெசா ஒக்டோவியன் என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார். அத்தோடு இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், கடந்த புத்தாண்டு சமயத்தில் சிறுநீரகத்தில் கல் பிரச்சினை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று தெற்கு ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லூலா லஹ்பா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பாதுகாப்புப் பணியாளர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி தகவல் வெளியாவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு, அவரது காதலரான ரெசா ஒக்டோவியனின் இசைக்குழு தனது நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இசைக்குழு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
'எங்கள் குழுவில் ஒருவருக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனநிலையில் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தது. இந்த இறப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லூலா லஹ்பாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது மருத்துவ அறிக்கைகளை வைத்துப் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
Insta celebrity Lula Lahfah found dead in an apartment