ராசியில்லாதவள்., விபரீத முடிவை எடுத்த புதுமணப்பெண்.! மதுரையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ராசியில்லாத பெண் என்று கூறியதால், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளனை கிருஷ்ணாபுரத்தில் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரின் மகன் ஜெயகுமார் அஞ்சலக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருபுவனம் காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 17 தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயக்குமாரின் பாட்டி விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயக்குமாரின் தாய் மாமாவிற்கு விபத்து ஏற்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், ஜெயக்குமாரின் குடும்பத்தில் பல்வேறு இன்னல்கள் வந்ததால், ஜெயக்குமார் உறவினர்கள் உன் மனைவி வந்த நேரம், ராசி இல்லாதவள் போல, அதனால்தான் இதுபோன்று அபசகுனமாக காரியங்களில் நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனை அறிந்த புதுப்பெண் காளீஸ்வரி. தான் ராசி இல்லாதவன் இல்லாதவள் என உறவினர்கள் கூறியதால் மிகுந்த மனவேதனையில் பிறந்துள்ளார். இந்த நிலையில்தான் வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத பொழுது காளீஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துமனை கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI new married girl suicide


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal