விளாத்திகுளம் கொடூரம்: 9 நாட்களுக்குப் பிறகு சிக்கிய தர்ம முனீஸ்வரன்...! - 10 தனிப்படைகளின் அதிரடி வேட்டை - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 9 நாட்களுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (37) என்பவரைப் காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், 10 தனிப்படைகள் அமைத்துத் தேடப்பட்டு வந்த நிலையில் பிடிபட்ட அவரை, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு, அங்குள்ள மற்ற கைதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.

எனவே, பாதுகாப்பு கருதி அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, விளாத்திகுளம் காவலர்கள் அவரை மார்ச் 20-ம் தேதி நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vilathikulam Atrocity Dharma Muneeswaran Apprehended After 9 Days High Intensity Manhunt by 10 Special Squads


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->