ஏன் விடியா திமுக அரசு என்று விமர்சிக்கிறோம் என்பதற்கு இதான் சாட்சி - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஏன் விடியா திமுக அரசு என்று விமர்சிக்கிறோம் என்பதற்கு உதாரணமாக ஆட்சி முடியும் தருவாயிலும் அரங்கேறிய அவலம் தான் இது.

கடலூர் அரசு மருத்துவமனை பகுதியில் சாலைப் பணிக்காக பள்ளம் தோன்றியதால் மின்தடை ஏற்பட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இன்றி செல்போன் டார்ச் லைட் மூலம் சிகிச்சை அளித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
அவசரத்திற்கு ஜெனரேட்டர் வசதி கூட இல்லாமல் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டது நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது..

விடியா திமுக மாநாடுகளில் மட்டும் லட்சக் கணக்கில் செலவு செய்து வண்ண விளக்குகளை எரிய விட்டு பொதுக்கூட்டம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின் அரசில் குறைந்தபட்சம் ஜெனரேட்டர் கூட இல்லாமல் மக்கள் நல்வாழ்வுத்துறை எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் இப்படி ஓர் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இனியும் இந்த விடியா திமுக அரசு வேண்டுமா? மக்களே சிந்தித்து வாக்களிப்போம்..! என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->