ஆனையூர் மீனாட்சி கோயிலில் மாணிக்கவாசகர் உலோக சிலை மீட்பு! 5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையை மீட்டுள்ளனர்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புபிரிவின் திருநெல்வேலி சரக ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கடந்த 10.10.2025 அன்று மாலை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி கிராமத்தில் வாகனதணிக்கை செய்தனர்.

அந்த குழுவினர் TN 58 9372 ஹோண்டா டிரிம்நியோ என்ற வாகனத்தை தணிக்கை செய்து அந்த வாகனத்தில் இருந்த பையை சோதனை செய்ததில் ஒரு அடி உயரத்தில் மூன்றரை கிலோ எடை அளவு கொண்ட மாணிக்கவாசகர் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது.

அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஐயர்சாமி, வெள்ளக்காரப்பட்டி என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர் சோலை வேல்முருகன் மதன் ஆகியோருடன் இணைந்து உசிலம்பட்டியில் ஆனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி கோயிலில் இருந்த மாணிக்கவாசகர் உலோக சிலையை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

காசிமாயன் அந்த சிலையை விற்க முயற்சி செய்தும் தோல்வி அடைந்துள்ளார். அதனால் அவர் உசிலம்பட்டி தாலுகா, பாப்பாபட்டியை சேர்ந்த பெரியமாயன் என்பவரை அணுகியுள்ளார். இந்த சிலையை விற்க காசிமாயனும் தவசியும் சம்பவ இடத்தில் சிலையை வாங்க இருந்த முகவருக்காக காத்திருந்த சமயத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து குற்றத்தில் தொடர்புடைய காசிமாயன் மற்றும் தவசி ஆகியோரை கைது செய்து ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையையும் ஒரு இரண்டு சக்கர வாகனத்தையும் மீட்டுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai manikkam vasakar statue


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->